000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a மகாவீரர் |
300 | : | _ _ |a சமணம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a 24 சமண தீர்த்தங்கரர்களில் 24-வது தீர்த்தங்கரர் மகாவீரர் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சமண தீர்த்தங்கரர்களில் 24-வது தீர்த்தங்கரரான வர்த்தமானர் என்ற இயற்பெயர்கொண்ட மகாவீரர் கி.மு. 599 வருடம், இந்தியாவின் பீகார் மாநிலம் வைசாலிக்கு அருகிலுள்ள குண்டா என்ற இடத்தில் சித்தார்த்தர்-திரிசலாவுக்கு மகனாக அரசக் குடும்பத்தில் பிறந்தார். சமணக் கொள்கைகளில் பற்று கொண்ட மகாவீரர் மனித வாழ்க்கையின் அர்த்தம் தேடி, சுமார் பனிரெண்டு ஆண்டுகள் தியானம் மற்றும் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டு சாலா என்னும் மரத்தடியில் ஞானம் பெற்றார். மகாவீரர் என்றால் பெரும்வீரர் என்று பொருள். தான் கண்ட உண்மைகளை உலகத்திற்கு எடுத்துரைக்க விரும்பிய மகாவீரர், இந்தியா முழுவதும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு, தாம் அறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தார். இவரே சமண சமயத்தில் தோன்றிய கடைசி தீர்த்தங்கரும் ஆவார். தமது காலத்திற்கேற்ப சமண மத கொள்கைகளை சீர்திருத்தம் செய்தார். சமண மலையின் பின்புறம் உள்ள செட்டிப்புடவு என்னும் குகையின் நுழைவுப் பகுதியில் பெரிய அளவில் மகாவீர் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. அசோக மரத்தின் கீழ் மகாவீரர் அர்த்த பத்மாசனத்தில் பீடத்தின் மேல் அமர்ந்துள்ளார். பீடத்தின் தாங்குதளத்தில் கண்டப்படையில் மூன்று சிம்மங்கள் காட்டப்பட்டுள்ளன. சிம்மம் மகாவீரரின் குறியீடாகும். பீடத்தின் பின்னால் இருபுறமும் யாளிகள் தாங்கும் தூண்களையுடைய சாய்மானத்தில் திகம்பரராய், திசைகளையே ஆடையாக உடுத்து, நீள் தொள்ளைக் காதுகளுடன் காட்சியளிக்கிறார். தலையின் மேல் முக்குடை காட்டப்பட்டுள்ளது. அவை மகாவீரர் கூறிய மூன்று ரத்தினங்கள் என்னும் சமணக் கொள்கைகளை குறிப்பிடுவனவாக காட்டப்படும் குறியீடாகும். மேலே கந்தர்வர்கள் இருவர் பறந்த நிலையில், ஒரு கையில் தாமரை மலரைப் பிடித்தபடியும், மற்றொரு கையால் போற்றி முத்திரை காட்டியபடியும் உள்ளனர். மகாவீரர் அமர்ந்துள்ள சாய்மானத்தின் மேல் அமர்ந்த நிலையில் இரு சாமர வீர்கள் காட்டப்பட்டுள்ளனர். மகாவீரரின் தலைக்குப் பின்னால் திருவாச்சி போன்ற நீள் வட்ட வடிவ ஒளி வட்டம் காட்டப்பட்டுள்ளது. |
653 | : | _ _ |a மகாவீரர், 24-வது தீர்த்தங்கரர், வர்த்தமான மகாவீரர், சமணர் குடைவரை, தீர்த்தங்கரர், சமணர் மலை, செட்டிப்புடவு, சமணர் சிற்பங்கள், சமணர் குடைவரை, தீர்த்தங்கரர், சமணர் சிற்பங்கள், மதுரை சமண சிற்பங்கள், பாண்டிய நாட்டு சமணம், பாண்டிய நாட்டு சமண சிற்பங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a சமணர் மலை |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கீழக்குயில் குடி |d மதுரை |f மதுரை |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
914 | : | _ _ |a 9.9220361 |
915 | : | _ _ |a 78.04654241 |
995 | : | _ _ |a TVA_SCL_000274 |
barcode | : | TVA_SCL_000274 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |